Oplus_131072
உங்கள் வீட்டிற்கு செய்வினை – சூனியம் வைக்கப்பட்டுள்ளதா?
இந்த செடியை வளருங்கும் எல்லாம் ஓடிடும்.வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் வரும்போது
நமக்கே சந்தேகம் வந்துவிடும். நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலின் அதிகம் இருக்கிறதோ. கண்ணுக்கு தெரியாத பேய் பிசாசுகளின் சேட்டையாக இருக்குமோ
. அல்லது யாரேனும் நமக்குத் தெரியாமல் செய்வினை பில்லி சூனியம் வைத்து விட்டார்களோ. எதனால் இவ்வளவு பிரச்சனைகள். எதனால் எதிர்பாராத கஷ்டங்களும் மரணங்களும் நம் குடும்பத்தை துரத்துகிறது என்ற சந்தேகம் நமக்கு இருக்கும்.
சில வீட்டில் சில பேரால் நிம்மதியாக வாழவே முடியாது. மன அமைதி இழந்து பித்து பிடித்தது போல இருப்பார்கள்.
ஆனால், அந்த வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால், அவர்களுடைய மனது சாந்தமாகி சாதாரணமாக இருப்பார்கள். அப்போது அந்த வீட்டில் நமக்கு தெரியாத ஏதோ ஒரு குறை உள்ளது என்று அர்த்தம்.
இப்படிப்பட்ட சந்தேகங்கள் உங்களுடைய வீட்டில் இருந்தால் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் சந்தேகங்களுக்கான பதில் உடனடியாக கிடைத்து விடும். குறைந்தது 3 நாள், அதிகபட்சம் 5 நாட்களில் கண்டுபிடித்துவிடலாம்.
ஆம்… உடனடியாக
வெள்ளை செம்பருத்தி பூ செடியை ஒரு சிறிய தொட்டியில்,இச்செடியை நட்டு உங்கள் வீட்டு வாசலிலும் வைக்கலாம். அல்லது வீட்டிற்குள் சூரிய வெளிச்சம் வரும் இடத்திலும் வைத்து வளர்க்கலாம்.
இந்த செடி எதிர்மறை ஆற்றல்.இருக்குமிடத்தில் நிச்சயமாக வளராது
மூன்று நாட்களில் அந்த செம்பருத்தி பூ செடி பட்டுப் போய் விட்டால், அதாவது வாடி விட்டால் உங்களுடைய வீட்டில் எதிர்மறை சக்தி அதிகம் இருப்பதாக அர்த்தம்.
அதிகபட்சம் ஐந்து நாட்கள் கூட இந்த சோதனையை நீங்கள் செய்து பார்க்கலாம். அப்படி அந்த செடியானது வாடாமல் உங்களுடைய வீட்டில் தழைத்து வளர தொடங்கி விட்டால் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் எதுவும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
நம்பிக்கை உள்ளவர்கள் இந்த செடியை வைத்து வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறதா இல்லையா என்று சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய வீட்டில் இந்த வெள்ளை செம்பருத்தி பூ செடியை வைத்து அது வாடிவிட்டது. உடனே அதனை கண்டு பயப்படக்கூடாது.
நாட்டு மருந்து கடைகளில் கொஞ்சமாக ஹோமம் செய்வதற்காக சமித்து குச்சிகள் விற்கப்படும். அந்த சமித்து குச்சிகள் சிறிதளவு, சிவப்பு குன்றிமணி ஒரு கைப்பிடி அளவு, மருதாணி விதை ஒரு கைப்பிடி அளவு, செந்நாயுருவி ஒரு கட்டு இந்தப் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள்.
வீட்டில்
சாம்பிராணி தூபம் போடுவதற்காக ஒரு தூபக்கால் வைத்திருப்பீர்கள் அல்லவா. அதில் ஒரு கட்டி கற்பூரத்தை வைத்துவிட்டு, சமித்து கட்டைகளை போட்டு நெருப்பு மூட்டி விட்டு அந்த நெருப்பில், சிவப்பு குன்றின் மணி, செந்நாயுருவி, மருதாணி விதை, இந்த பொருட்களை போட்டு புகை மூட்ட வேண்டும். இந்த புகையை உங்கள் வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமையில் இந்த சிறிய ஹோமத்தை உங்கள் வீட்டில் செய்துவர வேண்டும்.
மூன்று வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து செய்தால் உங்கள் வீட்டை பிடித்த கெட்ட சக்தி வீட்டிலிருந்து வெளியே ஓடிவிடும்
. அதிகப்படியான கண்திருஷ்டி இருந்தாலும் இந்த வெள்ளை செம்பருத்தி பூ செடி அந்த இடத்தில் வளராது.
உடனே வளர்த்து பாருங்கள்.உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.




