உடனடி சக்தி பெற சில சிறந்த உணவுகள் என்னென்ன தெரியுமா..??
வாழைப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரை உடலுக்கு உடனடியாக ஆற்றலை தருகிறது. ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம். இது சர்க்கரையை மெதுவாக உறிஞ்சி நீண்ட நேரம் ஆற்றலை தரும். பருப்பு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை உடலுக்கு நீண்ட நேரம் ஆற்றலை தரும். முட்டையில் புரதம் மிகுந்துள்ளது இது தசைகளை வலுப்படுத்தி சோர்வையும் போகும் பாலில் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்தி உடலுக்கு ஆற்றலை தரும். தேன் இயற்கை சர்க்கரையின் சிறந்த மூலமாகவும் இது உடலுக்கு உடனடியாக ஆற்றலை தரும். முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் இது சர்க்கரையை மெதுவாக உறிஞ்சி நீண்ட நேரம் ஆற்றலை தரும். பழச்சாறுகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது இவை உடலுக்கு ஆற்றலைத் தரும்.




