உறவினர் வாங்கிக் கொடுத்த லாட்டரி சீட்டால் கோடீஸ்வரியான பெண்..!!
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவருக்கு அவரின் உறவினர் அண்மையில் இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கிக் கொடுத்ததோடு தனக்கும் இரண்டு சீட்டுகளை வாங்கிக் கொண்டார். அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்த இரண்டு சீட்டுகளுக்கும் சேர்ந்து ரூ.1 கோடி அளவில் பரிசு விழுந்துள்ளது. மற்ற இரண்டு சீட்டுகளுக்கு பரிசு கிடைக்கவில்லை. இது குறித்து அப்பெண் கூறும்போது, “பரிசு கிடைத்த தகவலை அறிந்து நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்தேன்.” என்றார்.