நமது காலை உணவில் உளுந்தை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கும் எலும்புகளின் தேய்மானத்தை சரி செய்வதற்கும் பெரிதும் உதவுகிறது..
உளுந்துடன், பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும், உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி ஆகும், உளுந்தை ஊற வைத்து அந்த நீரை மறுநாள் அதிகாலையில் குடித்து வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் விரைவில் சரியாகும், உளுந்தை ஊற வைத்து காலையில் அரைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் மற்றும் முதுகு வலி விரைவில் சரியாகும் மேலும் செரிமான பாதையிலுள்ள செரிக்காத நச்சுப் பொருட்களை கழிவாக மாற்றி வெளியேற்றுவதில் உளுந்து பெரிதும் உதவுகிறது, தினசரி உளுந்து நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கியங்களும் கிடைத்து விடுகிறது இதனால் மூட்டு தேய்மானங்கள் எலும்பு தேய்மானங்கள் அனைத்தும் சரிவர ஆரோக்கியம் அடைகிறது…!!



