எந்தெந்த தெய்வத்திற்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..??

 

நம் அன்றாட வாழ்க்கையில் தெய்வத்தை வணங்குவது என்பது அனைவராலும் கடைபிடிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஒன்று. இந்நிலையில் நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது எந்த கோயிலுக்கு செல்கிறோம்? எந்த சாமியை வணங்குகிறோம் என்பதை பொறுத்து அந்த தெய்வத்திற்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்ற ஒரு வழக்கமும் உண்டு. ஆனால் இது பலருக்கும் தெரியாது. இந்நிலையில் எந்த தெய்வத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

விநாயகர் கோவிலுக்கு செல்லும் பொழுது விநாயகருக்கு ஐந்து தீபங்கள் ஏற்ற வேண்டும். முருகன் கோவிலுக்கு செல்லும் போது முருகனுக்கு ஒன்பது தீபங்கள் ஏற்றுவது மிகவும் சிறந்தது. ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும்போது 11 தீபங்கள் ஏற்றுவது மிகவும் நல்லது. துர்க்கை கோவிலுக்கு செல்லும்போது துர்க்கை அம்மனுக்கு ஒன்பது தீபங்கள் ஏற்ற வேண்டும். மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும்போது ஐந்து தீபங்கள் ஏற்றுவது நல்ல பலனை கொடுக்கும். ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும்போது ஐந்து தீபங்கள் ஏற்றுவது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. காலபைரவர் கோவிலுக்கு செல்லும்போது ஒரு தீபம் மட்டும் ஏற்றினாலே போதும். எனவே இதை எல்லாம் அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு தீபமேற்றி தெய்வத்தை வழிபடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

Read Previous

திருமணத்தில் பின்பற்றப்படும் முக்கிய சடங்குகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Read Next

உடலுறவு கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்…!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular