மெய் பேசும் இரு விழியே
பொய் பேச உதடுகளே
பெண் பூவே
அன்பு தந்த கண்களுக்கு
என் மனதை நான் கொடுத்தேன்
கில்லிதந்த அவள் மனதை
என் இதயம் அள்ளிக்கொள்ள
என்னுடைய காதலி போல் – இங்கு
காதலை யாரும் சொன்னதில்லை
என்னுடைய காதலி போல் – இங்கு
யாருக்கும் கோபப்பட தெரிய வில்லை
என்னவள் கொலுசின் ஒளியில் கூட – அந்த
காதலை நானும் கொஞ்சம் கண்டுகொண்டேன்
முத்துக்கள் உதிரும் சிரிப்பில் கூட – அவள்
காதலை நானும் கொஞ்சம் கண்டுகொண்டேன்
எனக்குள் காதல் பிறந்ததன்று – அவள்
கண்களில் காதலை கண்டவுடன்
சொல்ல ஒரு வார்த்தை இல்லை – அவள்
கண்களில் நான் கண்ட காதலையும்
மெல்ல மெல்ல வரும் மழலை போல் – அவள்
என்னுள்ளே வந்து அமர்ந்துவிட்டால்
சட்டென காலில் குத்தும் முல்லை போல – என்
மனதில் காதலை விதைத்து சென்றால்
சஞ்சலப்பட்டு நின்ற போது – அவள்
கோபத்தை காட்டி அருகில் வந்தாள்
சொல்லின்றி இரு விழி பார்வையிலே – எனை
கீழேயும் தள்ளிவிட்டு சென்று விட்டால்
என் காதலியே
மெய் பேசும் இரு விழியே
பொய் பேச உதடுகளே
பெண் பூவே…




