
வாழைப்பழம் சாப்பிடுவதால் நமது உடலில் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை…
ஆப்பிளை விட வாழைப்பழத்தில் மூன்று மடங்கு பாஸ்பரஸ் உள்ளது நான்கு மடங்கு புரோட்டின் அதிகமாக உள்ளது ஐந்து மடங்கு வைட்டமின் ஏ குளுக்கோஸ் பொட்டாசியம் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து போன்றவை உள்ளன, சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு சிகரெட் மீதான ஆர்வம் குறையும், மாதவிலக்கு வருவதற்கு முன் சிலருக்கு வயிற்று வலி எரிச்சல் உடல் உபாதைகள் தோன்றும் அவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும், மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க செய்கிறது, வாழைப்பழம் எனவே ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வாழைப்பழம் ஏற்றது, கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் சிறுநீரக சம்பந்தமான கோளாறுகள் வராது. மூட்டு வலி முழங்கால் வீக்கம் போன்றவை கட்டுப்படும், மனிதன் ஒருவன் தொடர்ந்து 90 நிமிடங்கள் வேலை செய்ய தேவையான சக்தி இரண்டு வாழைப்பழத்தில் உள்ளது, ஆப்பிளை விட வாழைப்பழத்தில் இரண்டு மடங்கு மாவு சத்து உள்ளது, தினந்தோறும் வாழைப்பழம் சாப்பிடுவது நமது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்..!!