Oplus_131072
கடுமையான சளி மற்றும் கல்லீரல் வீக்கத்துக்கான மருந்து……..
விளாம்பழம் சதை நூறு கிராம்
மல்லி தழை ஐந்து கிராம்
கடலைப் பருப்பு பத்து கிராம்
உளுத்தம்பருப்பு பத்து கிராம்
பத்து கிராம் மிளகாய் வற்றல்
கல் உப்பு தேவையான அளவு
செக்கு நல்லெண்ணெய் தேவையான அளவு
வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி வற்றல் கடலைப் பருப்பு உளுந்தம்பருப்பு ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாக வறுத்து மல்லித்தழை போட்டுக் கிளறி விளாம்பழ சதையை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறி வதக்கி தேவையான அளவு கல் உப்புப் போட்டு வதக்கி இறக்கி அரைத்து விழுதாக்கி பின் அரைத்த விழுதை கடுகு கறிவேப்பிலை தாளிதம் செய்து துவையலாக எடுத்துக் கொள்ளவும்
இந்த துவையலை நண்பகல் சூடான சோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டு வர படிப் படியாக கடுமையான சளி மற்றும் கல்லீரல் விக்கம் குணமாகும்…..




