கணவன், மனைவி இருவரும் ஒற்றுமையாகவும் அன்பாகவும் வாழ்வதற்கு கண்டிப்பாக இதையெல்லாம் கடைபிடியுங்கள்..!!

கணவன் மனைவி ஒரு தராசை போல ஒன்று ஏறினால் மற்றொன்று இறங்கி வந்து விட்டு கொடுத்து பழக வேண்டும்.

துணையின் குணம் இது தான் என்று தெரிந்த பிறகு மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்காட்டுவதில் எந்த லாபமும் இல்லை.

●கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கோபப்படாதீர்கள்.

●உங்கள் இருவரின் சண்டையில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றால் அந்த வெற்றிையை மற்றவருக்கு விட்டு கொடுங்கள்.

●தயவு செய்து பழைய தவறுகளை சுட்டிக்காட்டி பேசாதீர்கள்.

●உங்கள் இருவரின் சண்டையில் குடும்ப உறுப்பினர்களை இழுத்து பேசாதீர்கள்.

●ஒரு பிரச்சனையில் எது தவறு என்று தேடுங்கள் யார் செய்த தவறு என்று அல்ல.

●முதலில் அடுத்தவரை முழுமையாக பேச விடுங்கள் தடை போடாதீர்கள்.

●IPL match, football match, Pubg, face book,Quora, twitter , Instagram, politics, office pending works யை விட உங்கள் மனைவியின்/கணவரின் உணர்ச்சி , உடல் நிலை , மனநிலை இவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.

●அடுத்தவரை உங்களது கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்கிற எண்ணம் தவறானது.

●நீங்கள் உங்கள் துணைக்கு கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பரிசு உங்களின் நேரம்.

●ஆண்களுக்கு (பெருவாரியான) ஞாபகம் சக்தி குறைவு அதாவது மனைவி சம்பந்தப்பட்ட விடயங்களில் மனைவிக்கோ அதிக ஞாபக சக்தி அதிகம் மனைவியின் பிறந்த நாளை மறந்து விடுவது திருமண நாளை மறந்து விடுவது.

●நமது பலவீனம் எதுவோ அதை வெளிப்படையாக அறிவித்து விடுங்கள் பிறகு அதை சுட்டிக்காட்டி சண்டை வருவதை தவிர்க்கலாம் அல்லவா. (அந்த பலவீனத்தை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும்)

●உங்களது துணையின் குறைகளை எந்த காரணத்திற்காகவும் யாரிடமும் பகிராதீர்கள் அவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கப் போவது இல்லை.
இந்த மாதிரி வாழ்ந்தால் போதும் கணவன் மனைவி உங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் வராது மிக மகிழ்ச்சியாக வாழ முடியும்.

Read Previous

தத்துவங்கள் நிறைந்த பதிவு..!! தத்துவம் படிங்க கெட்டியா புடிங்க..!!

Read Next

வெளிநாட்டு வாழ்க்கையை பற்றிய ஒரு பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular