கணவரை கொன்றவர் குடும்பத்தை பழிவாங்க சென்ற பெண்..!!
கணவரை கொன்றவர் குடும்பத்தை பழி தீர்க்க, பெண் காவலர் என்று கூறி இரவில் கூலிப்படையுடன் வீடுபுகுந்து 3 பேரை வெட்டிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூர் அருகே உள்ள மேட்டு காலனியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர், பொன்னேரி சின்னக்காவனத்தை சேர்ந்த லட்சுமணனின் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லட்சுமணனின் மனைவி ரம்யா, ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸ் என்று வீட்டு புகுந்து விஷ்ணுவின் தாய் , தந்தை மற்றும் தம்பி மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு நகைகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.