
இந்த நவீன காலகட்டத்தில் பல குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுவது சாக்லேட். குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் பொருட்கள் பல இருந்தாலும் அனைத்து குழந்தைகளுக்கும் பிடிக்கும் ஒன்று தான் இந்த சாக்லேட். குழந்தைகள் சாக்லேட் சாப்பிடுவது அவர்களுடைய உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
குழந்தைகள் சாக்லேட் சாப்பிடுவதால் அந்த சாக்லேட்டில் உள்ள சரடோனின் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்தும். மேலும் சாக்லேட்டின் உள்ள முக்கிய மூலப்பொருள் கொக்கோத்தூள் இதில் குறைந்த அளவு கொழுப்பு இருக்கிறது இதனால் 60% மேல் உள்ள கொக்கோ இருப்பதை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். மேலும் அதிக அளவு சாக்லேட் சாப்பிடுவது தவிர்க்க வேண்டிய ஒன்று என்றாலும். கருப்பு நிற சாக்லேட்டில் அதிகப்படியான மூலப்பொருள் சேர்க்கப்பட்டிருப்பதால் இனிப்பும் குறைவாகவே இருக்கும் அதனால் பெற்றோர்கள் இந்த மாதிரி உள்ள சாக்லேட்டுகளை குழந்தைகளுக்கு அதிகமாக சாப்பிட கொடுக்காதீர்கள். ஏனென்றால் இந்த சாக்லேட் குழந்தைகளுக்கு தலைவலியை கூட ஏற்படுத்தலாம். ஒரு நாளைக்கு குழந்தைகளுக்கு 4 கிராம் சர்க்கரையும் ஒரு கரண்டி சாக்லேட் பவுடருமே போதும். இதற்கு மீதி கொடுத்து விடாதீர்கள். இதற்கு மீறி சாப்பிட்டால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்படும் என்று கூறுகின்றனர். அதிகமான சாக்லேட் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே பல் சொத்தை, தலைவலி, மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றார் போல அளவுக்கு மீறி சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை. அளவாக சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.