இந்த கோடை காலத்தில் விடுமுறை நாட்களில் நிறைய பள்ளிகள் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவது நமக்கு நன்றாகவே தெரியும். முக்கால்வாசி பள்ளிகளில் இது நடந்து கொண்டே தான் இருக்கிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளுக்கு இந்த இக்கெட்டான சூழலை உருவாக்கிக் கொடுக்கின்றது இந்த பள்ளிகள். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி இப்போது வந்துள்ளது.
மதுரையில் இருக்கும் ஒரு தனியார் நர்சரி பள்ளியில் நான்கு வயது சிறுமி பயிற்சி வகுப்பின் காரணத்தினால் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் எதிரொளியாக கலெக்டர் சங்கீதா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது கோடை விடுமுறை நாட்களில் எந்த பள்ளியும் அனுமதியின்றி பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மீறி நடத்தினால் கடும் நடவடிக்கைகள் அந்த பள்ளிகளின் மீது எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதைப் போலவே தமிழ்நாடு முழுவதும் வகுப்புகள் நடக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை மக்களிடமிருந்து அரசுக்கு வந்த வண்ணம் இருக்கிறது.




