காலம் காலமாக நாம் அனைவரும் கோவிலுக்கு செல்வதும் குலதெய்வங்களையோ அல்லது மற்ற தெய்வங்களையோ வணங்குவது வழக்கமாக வைத்திருக்கிறோம், அப்படி இருக்கும் பட்சத்தில் கோவிலுக்கு சென்றவுடன் சாமி கும்பிட்டு விட்டு உடனே வெளியே வருவதனால் ஏற்படும் மன சஞ்சலங்கள்..
பலரும் கோவிலுக்கு ஆன்மீக பக்தியோடு சென்று இறைவனை வணங்கி விட்டு உடனே வெளியேறுவது மன சஞ்சலத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கெடுப்பதாக கூறுகின்றனர், கோவிலுக்கு சென்றால் இறைவனை வணங்கி விட்டு இறைவனின் கருவறையை சுற்றி விட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து தனது உயர்ந்த எண்ணங்களை மனதார நினைத்தால் நல்லது நடக்கும், மேலும் கோவிலில் தெய்வ சக்திகள் மற்றும் நல்ல சக்திகள் கிடைக்கிறது அதனை சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது, இதன் மூலம் குடும்பத்தில் ஆரோக்கியம் மன நிம்மதி சண்டை சச்சரவுகள் விலகி நம் வீட்டில் தெய்வங்கள் குடியேறி நமது குடும்பத்தை செல்வ செழிப்போடு வைத்திருப்பதாக ஐதீகம் கூறுகிறது…!!