
ஒட்டுண்ணிகளால் பரவக்கூடிய ஒருவித வைரஸ் சீனாவை தாக்குகிறது என்று தெரியவந்துள்ளது இதில் சீனா பெரும் பாதிப்பை சந்திக்கிறது என்று தகவல் வெளிவந்துள்ளது….
ஒட்டுண்ணிகளால் பரவக்கூடிய வைரஸ் ஒன்று சீனாவில் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது என்று தகவல் வெளிவந்த நிலையில், இதற்கு வெட்லேண்ட் வைரஸ் என்று பெயர் வைத்துள்ளனர் மேலும் இவை விலங்குகளை தாக்கக் கூடிய ஒட்டுண்ணிகள் தற்போது மனிதர்களையும் தாக்குகிறது என்று தெரியவந்துள்ளது இந்த பாதிப்பில் மனிதர்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்கின்ற நிலை இருப்பதாக சீனா அறிவித்துள்ளது, இந்த வைரஸின் பாதிப்பானது மனிதனின் மூளையை தாக்குகிறது என்றும் தெரிய வந்துள்ளது மேலும் இந்த மோசமான பாதிப்பிலிருந்து சிகிச்சை முறையை பெற்று உடல் ஆரோக்கியம் அடைந்து மீண்டு வந்தாலும் இந்த வைரஸின் தொற்று மூளையை மற்றும் நரம்பு மண்டலத்தை தொடர்ந்து பாதிப்படையை செய்கிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது, மேலும் வெட்லேண்ட் வைரஸ் தாக்குதலில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் விதமாக சீன சுகாதாரத்துறை அரசு அதற்கான முறைகளை கையாண்டு கொண்டு வருகிறது..!!