நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தை நீரில் கலந்து குடிப்பதனால் நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கிறது..
நாம் சமையலுக்கு அன்றாட பயன்படுத்தும் சீரகத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது, சுடுதண்ணீரில் சீரகத்தை கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான செரிமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்து விரைவில் உணவை செரிமான செய்கிறது, செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் வயிற்று வலி, வாய் துர்நாற்றம் மற்றும் வயிறு உப்புசத்திற்கும் பயன்படுகிறது, சீரகத் தண்ணீர் ஆன்ட்டி ஆக்சிடேஷன் அதிகம் இருப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலுக்கு தருகிறது, மேலும் சீரக தண்ணீரை குடிப்பதனால் தேவையற்ற பசி தூண்டுதலை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது, மேலும் தொடர்ந்து சீரக தண்ணீரை குடித்து வருவதனால் உடல் எடை கட்டுப்பாடு இருப்பதும் உடல் எடையை குறைக்கவும் செய்கிறது..!!