ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் பொறுப்பை பெற்ற சன் டிவி..!! விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

எச் வினோத்தின் இயக்கத்தில் தளபதி விஜயின் நடிப்பில் அனிருத் இசையில் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பில் இருக்கும் படம் தான் ஜனநாயகன். இந்தப் படம் தான் தனது கடைசி படம் என்று விஜய் ஒரு வருடத்திற்கு முன்பாகவே அறிவித்து இருந்தார். இதனால் அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள் அவரது அரசியல் வருகையை ஆதரித்து இந்த படத்திற்காக மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் தகவல் முதல் முதலாக வந்த பொழுது அக்டோபர் மாதம் 2025 ஆம் வருடம் ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பாக ஜனநாயகன் பொங்கலுக்கு வருகை தருவதாக ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது.

தான் அரசியலில் போட்டியிடும் முதல் எலக்சனுக்கு முன்பாக இந்த படம் வெளி வந்தால் தனக்கு ஓட்டு கூட வாய்ப்பு இருக்கிறது என்று விஜய் இப்படி செய்திருக்கிறார் என்று அனைவரும் கூறுகின்றனர். இவர் கடந்த சில நாட்களாக பல மேடைகளில் ஏறி ஆளுங்கட்சியை விமர்சித்து வருகின்றார். அவருக்கு திமுகவிலிருந்து பலரும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இப்பொழுது வந்திருக்கும் தகவல் என்னவென்றால் ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் பொறுப்பை சன் டிவி கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வந்தவுடன் என்னதான் அடித்துக் கொண்டாலும் தொழில் என்று வந்தபோது அதை மனதில் கொள்ளாமல் இவர்கள் இருக்கின்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் இன்னும் சில பேர் இவர்கள் வெளியில் அடித்துக் கொண்டு உள்ளே பல டீலிங்கில் ஈடுபடுவதாக கூறுகின்றனர்.

Read Previous

பச்சை மிளகாய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

கருப்பு கொண்டைக்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular