காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பகுதிகளில் தங்களது ராணுவத்தை நிப்பாட்டி பாதுகாப்பில் இருந்து வருகிறது. பாகிஸ்தான் படை வீரர்கள் எல்லை பகுதிகளில் இந்திய ராணுவத்தை சீண்டி வருகின்ற நேரத்தில் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
ஜம்மு அண்ட் காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் பிரதம மந்திரி முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் இந்தியா முழுமையாக போரில் ஈடுபடாது என்று அனைவரும் கணித்து வருகின்றனர். போர் என்று ஒன்று வந்தால் அதை ரகசியமாக வைத்திருப்பார்கள் என்றும் சிறு அளவிலான தாக்குதல்கள்தான் நடக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் ஸ்ட்ரைக்குகள் என்ற அளவிலேயே பதிலடிகள் இருக்கும் என்றும் அனைவரும் கூறி வருகிறார்கள். கடற்படை விமானப்படையை விட ராணுவமே தாக்குதலில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் கூறுகின்றனர். இதற்கு காரணம் இந்தியா முழுமையாக போரில் இறங்கினால் வெற்றியே கிடைத்தாலும் பொருளாதார அளவில் பின் அடைந்து விடுவோம். மறுபடியும் 10 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டுவிடும். ஆகையால் தான் இந்தியா இந்த முடிவை எடுக்கும் என்று அனைவரும் கூறுகின்றனர்.




