தற்சமயம் பல இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டத்தில் அவர் பேசுகையில் மழையால் ஏற்படக்கூடிய எந்த விதமான சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மலை வெள்ளத்தால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்றும் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து அதிகாரிகளுக்கும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயல்பட வேண்டும் என்றும் அனைத்து அதிகாரிகளும் ஒன்றுபட செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார், மேலும் பருவமழை காலங்களில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்..!!




