தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி..!!

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமெடுத்து வருகிறது. இதனால் மத்திய & மாநில அரசுகள் டெங்கு கொசு ஒழிப்புக்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

அதில், ‘டெங்கு காய்ச்சலின் பரவல் குறையத் தொடங்கி தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருக்கிறது’. ‘டெங்கு உயிரிழப்புகளை பொறுத்தவரையில், கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டிருந்தன’. ‘அந்த நிலை தற்போது இல்லை’. ‘ஜனவரியில் இருந்து தற்போது வரை 5 இறப்புகள் பதிவாகியுள்ளது’. ‘நிபா வைரஸ் தமிழ்நாட்டில் இல்லை’ என்று கூறினார்.

Read Previous

‘NO PARKING’ பலகைகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது..!!

Read Next

படித்ததில் பிடித்த வரிகள்..!! யாரையும் காயப்படுத்தாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular