தயவுசெய்து ஏழைகளிடம் பேரம் பேசாதீர்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!

Oplus_131072

“வாழைப்பூ விலை எவ்வளவுங்க,” அந்த பெண் கேட்டாள்.
“ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?” என்றார் அந்த பாட்டி.
“சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?” என கேட்டாள்.

“சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. முதல் வியாபாரம் உனக்குத்தான்மா, சரி தாறேன்……

கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்,” என்றார் அவ் முதிர்ந்த பாட்டி…..

தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் வாழைப்பூக்களை வாங்கிக் கொண்டாள்.

பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள்.
அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர்.
சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا

பில் தொகை ரூபாய் 1200/-, அவள் ரூபாய் 1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்,” என்றாள்.

ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணம் விஷயம். ஆனால் வாழைப்பூ விற்ற பாட்டிக்கு வலி மிகுந்த விஷயம்.

இதில் உற்றுநோக்க வேண்டியது….
“நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தை காட்டுகிறோம். பணக்காரர்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்!!”

தயவு செய்து ஏழைகளிடம் பேரம் பேசாதீர்கள்…….

படித்ததில் பிடித்தது.

Read Previous

படித்ததில் வலித்தது.. பிள்ளைகளுக்கு தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி கொடுங்கள்..!!

Read Next

முட்டைக்கோஸில் இவ்வளவு நன்மைகள் ஒளிந்துள்ளதா..?? கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular