கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மருதூர், நங்கவரம், அய்யர்மலை, மணத்தட்டை, தாளியாம்பட்டி, சத்தியமங்கலம், பணிக்கம்பட்டி, இனுங்கூர், தோகைமலை, உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.