தினம் 3 முறை வெற்றிலையை மென்று சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா..??

 

வெற்றிலை ஏராளமான மருத்துவ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

வெற்றிலையில் கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை, சாதாரண வெற்றிலை அல்லது வெள்ளை வெற்றிலை, கற்புரவெற்றிலை,போன்ற வகைகள் உள்ளது.

அதில் அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை தினமும் எடுத்து கொள்வது உடலுக்கு பல்வோறு ஆரோக்கியப் பலன்களை தருகின்றது.

அந்தவகையில் தற்போது வெற்றிலையை சாப்பிடுவதனால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

தினமும் வெற்றிலை சாப்பிடுவதால் வெளியில் உள்ள புண்களும் மற்றும் வயிற்றுப் புண்களும் ஆற உதவுகிறது.

​வெற்றிலையைச் சாறாக அரைத்து வலி இருக்கும் மூட்டுப் பகுதியில் தினமும் தடவி வந்தால் ஒரு சில நாட்களிலேயே கவனிக்கத்தக்க மாற்றம் நிகழும்.

​வெற்றிலையில் இயற்கையாக உள்ள வேதிப்பொருட்கள், பெருங்குடல் காற்று நீக்கியாகச் செயல்படுகிறது. தேவையற்ற ஏப்பம் போன்றவற்றைச் சரி செய்கிறது.

வெற்றிலையை தினமும் உண்டு வந்தால் உடல் எடை சீராக வாய்ப்புகள் அதிகம். மேலும் செரிமானத்தைச் சீர் செய்வதால் தேவையற்ற உணவுகள் வயிற்றில் தங்குவதைத் தவிர்க்கலாம்.

தினமும் மூன்று முறை வெற்றிலையை அரைத்து அதன் சாற்றை விழுங்கும் பொழுது தொண்டையில் உள்ள புண்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்கும்.

தினமும் இரண்டு அல்லது மூன்று வெற்றிலையைச் சாப்பிட்டு வந்தால் ​ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனை விரைவில் குணமடையும்.

வெற்றிலையில் சிறிது கடுகு எண்ணெய் தடவிச் சூடு செய்து அதை நெஞ்சில் வைத்தால் சளி இருமல் போன்றவை குறையும்.

சிறு வெற்றிலைகளைத் தண்ணீரில் போட்டு அதனுடன் சீரகம் லவங்கப் பட்டை ஆகியவை சேர்த்துச் சூடு செய்து தினமும் ஒன்று முதல் இரண்டு நேரங்கள் குடித்து வந்தால் சுவாச கோளாறுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

Read Previous

இளநரை வராமல் தடுக்கும் எண்ணெய்.. இளநரை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்..!!

Read Next

தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும் வாழைத்தண்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular