கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து மாஞ்சேரி நோக்கி பேருந்து ஒன்று சென்றது இந்த பேருந்து கொண்டாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது ஆட்டோ ஒன்று நீண்ட நேரமாக வழிவிடாமல் சென்றது.
இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் பலமுறை வழி விடுமாறு ஹாரன் அடித்து உள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுனர் தன்னிடம் இருந்த அறிவாளை எடுத்து வெளியே நீட்டி ஆட்டி உள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாய் பரவியது.
இந்த சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுனர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் சம்சுதீன் என்பவர் கைது செய்யப்பட்டு பின் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்சுதீன் அறிவாளை கூர்மைபடுத்துவதற்காக கொண்டு சென்றதும் அப்போது பேருந்தின் ஓட்டுனர் தொடர்ந்து பல முறை ஹாரன் அடித்ததால் அரிவாளை எடுத்துக்காட்டியதும் தெரிய வந்துள்ளது. மேலும் பேருந்து ஓட்டுனர் வழி விடுமாறு தொடர்ந்து ஹாரன் அடித்ததால் ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுனர் அறிவாளை வெளியில் நீட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.