
கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது .வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது. தலைமுடி தரையில் உலா வருவது. ஒற்றடைகள் சேர்வது சூரிய மறைவுக்குப் பின் வீட்டை பெருக்குவது துடைப்பது தூங்குவது எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது .பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது .ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளின் தலை குளிப்பது குழாய்களில் தண்ணீர் சொட்டுவது சுவற்றில் ஈரம் தங்குவது ,செல் கரையான் சேர்வது பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் உலாக்குவது அதிக நேரம் ஈரத்துணிகள் போட்டு வைப்பது தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்திருப்பது வீணடிப்பது உணவு பொருள்கள் வீண் அடிப்பது உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது குறைந்தபட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது, மெல்லிசை கேட்காமல் அபசஇசைகளை கேட்பது, இல்லை இல்லை ,வராது வராது ,வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிப்பது ,படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது ,வாசலில் செருப்பு தொடப்பம் போன்றவற்றால் அலங்கோல படுத்தி வைத்திருப்பது போன்றவற்றால் செல்வம் குறையும். இவற்றையெல்லாம் தவிர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும் நிலைத்திருக்கும்.