வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் அதிகம் இருப்பதாக பலரும் கூறுகின்றனர், நாட்டு சர்க்கரை சாப்பிட்டதனால் உடல் ஆரோக்கியமாகவும் நாட்டு சர்க்கரை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் வருவதில்லை என்று பலரும் கூறுகின்றனர் ஆனால் இவை தவறான புரிதலே..
வெள்ளை சர்க்கரை ரத்தத்தில் உடனடியாக கலக்கும் நாட்டு சர்க்கரை மெதுவாக கலக்கும் அவ்வளவுதான் ஆனால் நாட்டு சர்க்கரை சாப்பிட்டால் சுகர் ஏறாது என்று தவறான புரிதல் சர்க்கரை நோயாளிடம் உள்ளது, ஆனால் காபி டீ யில் இரண்டு மூன்று ஸ்பூன் நாட்டு சர்க்கரையை கலந்து குடிக்கின்றனர் இது ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள், அரை ஸ்பூன் நாட்டு சர்க்கரையை மட்டுமே சர்க்கரை நோயாளிகள் எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள் ஆனால் சர்க்கரை நோயாளிகள் நாட்டு சர்க்கரை சாப்பிடுதல் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் சர்க்கரை நோய் அதிகரிப்பு ஏற்படாமல் இருப்பதாகவும் நினைத்துக் கொள்கின்றனர் ஆனால் அந்த சிந்தனை தவறு, நாட்டு சக்கரை அல்லது சாதாரண சர்க்கரை அளவோடு எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது..!!




