
நம் அன்றாட வாழ்க்கையில் ஓடி ஓடி வேலை செய்து உழைக்கும் பட்சத்தில் நமக்கு வருமானம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. நிலையில் நமக்கு வருமானமாக கையில் வரும் பணத்தை நாம் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துகிறோம். கையில் இருக்கும் பணம் செலவாக கூடாது. ஆனால், நம் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். குறிப்பாக வருத்தத்தோடு பணத்தை செலவு செய்யக்கூடாது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாடகை கொடுத்தால் தானே அந்த வீட்டில் குடியிருக்க முடியும். அதுபோல பசிக்கு உணவு தேவை அந்த உணவுக்கு பொருட்கள் தேவை தானே அதை நாம் வாங்கத்தானே வேண்டும். பணம் என்பது நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளத்தான். அது செலவாகும்போது ஒருபோதும் கவலையோடு இருக்கக் கூடாது.
இந்நிலையில் ஒரு சிலர் நாம் செலவு செய்த பணம் நமக்கே வந்து விடாதா என்ற எண்ணத்தில் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் இந்த பதிவு. நாம் செலவு செய்த பணம் நமது கைக்கே வர இந்த மந்திரம் மட்டும் போதும். பணத்தை செலவு செய்வதற்கு முன்பாக நம் மனதில் “ஓம் ஸ்ரீம் யம் நமஹ”என்ற மந்திரத்தை கூறுங்கள். இந்த மந்திரத்தை கூறும் போது செலவு செய்த அந்த பணம் நிச்சயம் உங்களுக்கு வேறு விதமாக வருமானமாக திரும்ப கிடைக்கும். பணத்தை கையில் கொடுப்பதாக இருந்தாலும் சரி, நவீன காலகட்டத்தில் ஏற்படும் நவீன முறைகளான ஜிபி போன் பே செய்தாலும் சரி அதை செய்வதற்கு முன்பு இந்த மந்திரத்தை உங்களால் எவ்வளவு முறை மனதில் கூற முடிகிறதோ அவ்வளவு முறை கூறலாம். இவ்வாறு செய்தால் இந்த பணம் ஏதோ ஒரு வழியில் நமக்கு வருமானமாக வரும் இதற்கு மாற்று கருத்தே இல்லை.