சிறுநீரகம் நமது உடலில் இருக்கும் ஒரு முக்கியமான உறுப்பாகும். உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற இது முக்கிய பங்கை வகித்து வருகிறது. ஆனால் நாம் இப்போது சாப்பிட்டு வரும் துரித உணவுகளால் இது பாதிப்படைந்து வருகிறது. நாம் எந்த செயல்களை செய்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
மிகவும் அதிகப்படியான புரதத்தை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதிக அளவான உப்பையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் சிறுநீரகம் மிக சுலபமாக பாதிப்படையும். அடுத்ததாக அதிகப்படியான வலி வரும்போது அதனை தாங்கிக் கொள்ளாமல் மாத்திரை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிப்படைகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் எப்போதும் சாப்பிடக்கூடாது. இப்படி செய்தாலும் சிறுநீரகம் பாதிப்படையும். இந்த செயல்களை எல்லாம் செய்யாமல் இருந்து நமது மிக முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாப்பது நமது கடமை ஆகும்.




