நெருக்கடியில் செந்தில் பாலாஜி..!! பறி போகுமா அமைச்சர் பதவி?.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, சிறையில் அடைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, செந்தில் பாலாஜி தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர். அதன்படி ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக தொடர்கிறாரா என உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. பண மோசடி வழக்கில் சிறை சென்ற செந்தில் பாலாஜி, 15 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வந்து மீண்டும் அமைச்சரானார். இதனை எதிர்த்து வித்யா குமார் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் டிசம்பர் 18ம் தேதிக்குள் செந்தில் பாலாஜி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் கிடைத்த மறுநாளே ஏன் அமைச்சரானார் என கடந்த டிசம்பர் 2 ஆம் தேதியும் செந்தில் பாலாஜி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Previous

சுவையான திண்டுக்கல் ஃபேமஸ் பால்பன் செய்வது எப்படி?.. செய்முறை உள்ளே..!!

Read Next

மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை..!! 179 காலியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular