இன்றைய காலகட்டங்களில் படிக்கட்டுகளை பயன்படுத்துவதே குறைவு லிஃப்ட் உதவியுடன் தான் போக வேண்டிய இடத்திற்கு பலரும் செல்கின்றனர், ஆனால் படிக்கட்டு மூலம் செல்வதனால் உடல் ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் இருக்கும் என்பதை இன்றைய உலகம் மறந்து விட்டது..
தினமும் ஏழு நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதனால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைகிறது, இதன் மூலம் இதய நோய் மற்றும் மாரடைப்புகள் ஏற்படுகிறது தவிர்க்க செய்கிறது, மேலும் உயர் ரத்த அழுத்தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், நுரையீரலுக்கு தேவையான ரத்த ஓட்டம் சீரான முறையிலும் சுவாச பிரச்சனையிலிருந்து விடுதலையும் கிடைத்துவிடும், மன அழுத்தம் மன பதட்டம் குறைவதற்கு தினமும் படிகள் ஏறி இறங்குவது நல்லது, வலுவான எலும்பு காரணமாக மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்..!!