
பனங்கிழங்கின் நன்மைகள் தெரியாமல் நாம் பலரும் சாப்பிட்ட அனுபவம் உண்டு ஆனால் பனங்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் கிடைத்து விடுகிறது…
நார்ச்சத்து நிறைந்தது பனங்கிழங்கு நார்ச்சதுக்கு மூல ஆதாரமாக உள்ளது குடல் அலர்ஜி வயிற்று மந்தம் மலச்சிக்கல் செரிமானமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு பனங்கிழங்கு சிறந்த உணவு ஆகும் கால்சியம் சத்து நிறைந்தது தசை வளர்ச்சிக்கும் வலுப்பெறுவதற்கும் பனங்கிழங்கு உதவுகிறது. பனங்கிழங்கு அனீமியா தொந்தரவு உள்ளவர்கள் பனங்கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் இரும்பு சத்து உடலுக்கு கிடைக்கும் பனங்கிழங்கு வாய்வு தொல்லை உடையது என்பதால் பூண்டு மிளகு உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம், அதேபோல் ஆஸ்டியோபோராசிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை தடுக்கக்கூடிய தன்மை பனங்கிழங்கிற்கு உண்டு. இரத்த கொழுப்பு கட்டிகள் உருவாகுவதை தடுக்கிறது,இதய நோய்களையும் நம்மை நெருங்க விடாமல் செய்கிறது, கால்சியம் சத்துக்களும் மெக்னீசியமும் அதிக அளவு பனங்கிழங்கு உள்ளதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது, கால்சியம் சத்து நிறைந்துள்ளது தசை வளர்ச்சிக்கும் வலு பெறுவதற்கும் பனங்கிழங்கும் மிகவும் நல்லது, எலும்புகளின் உரித்தன்மைக்கும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் பனங்கிழங்கு தக்க வளங்கள் கிடைக்கின்றன இதனால் வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் எழும்புறையில் எலும்பு மச்சை மூட்டு அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவது பனங்கிழங்கு..!!