பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க அரசு உத்தரவு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!
சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை, டிசம்பருக்குள் பதிவு செய்து முடிக்க வேண்டும். சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, உடனடியாக வங்கியிலோ, தபால் நிலையத்திலோ சேமிப்பு கணக்குகளை துவக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து ஆபத்தான நிலையிலும், பயன்பாடில்லாத நிலையிலும் உள்ள பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க வேண்டும். அதற்கு பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி, பொதுப்பணித் துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



