
பாகிஸ்தானின் அகோர கட்டாக்கில் உள்ள தாருல் உலூம் ஹக்கானியா மதரஸாவில் இன்று (பிப்.,28) தொழுகை நடைபெற்றது. அப்போது தற்கொலைப் படையினரால் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் (JUI-S) தலைவர் மௌலானா ஹமீத்-உல்-ஹக்கும் காயமடைந்தார்.