
பிரபல புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் (65) இன்று காலமானார்…
பிரபல புகழ் பெற்ற ஆன்மீக எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் 65 என்று காலமானார், மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது, தமிழ் எழுத்தாளரான இந்திரா சௌந்தர்ராஜன் பொதுவாசிப்பிற்குரிய நாவல்களை எழுதியவர், நாவல்கள் திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்புகள் ஆன்மீக சொற்பொழிவு போன்ற பல துறைகள் மூலம் புகழ்பெற்றவர், தென்னிந்திய மரபுகள் மற்றும் புராண கதைகளின் அடிப்படையில் வரலாறு சமூகம் ஆன்மீகம் மர்மங்கள் சித்தர்கள் பற்றிய நூல்களை எழுதியவர், அவர் அமானுஷ்யம், மறுபிறவி போன்றவற்றை உள்ளடக்கி ஏராளமான நாவல்கள் சிறுகதைகளை எழுதியுள்ளார். இந்திரா சௌந்தர்ராஜன் படைப்புகளான என் பெயர் ரங்கநாயகி மர்மதேசம் உள்ளிட்ட படைப்புகள் தொலைக்காட்சியில் தொடர்களாகவும் திரைப்படங்களாகவும் வந்துள்ளன, இந்து மதம் புராண இதிகாசங்கள் கலந்து எழுதுவதில் இந்திரா சௌந்தரராஜன் வல்லவர் சிருங்காரம் அனந்தபுரத்து வீடு ஆகிய படங்களுக்கு திரை கதையும் அவர் எழுதியுள்ளார், இவரது நூலான கிருஷ்ண தாசி காலபைரவர் அவசியம் போன்ற படைப்புகள் இந்தி மொழியில் தொலைக்காட்சி தொடர்களாக வெளி வருகிறது,மேலும் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய என் பெயர் ரங்கநாயகி என்னும் படைப்பு தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டு சிறந்த எழுத்துக்கான மூன்றாம் பரிச்சினை பெற்றது, சிருங்காரம் என்ற திரைப்படம் 2007 கான தேசிய விருது, மயிலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா விருது மற்றும் தமிழ் சங்கம் விருதுகளை பெற்றுள்ளது…!!