புத்தக பையில் இருந்த பாம்பு கடித்ததில் மாணவர் உயிரிழப்பு..!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் சிவப்பிரகாசம் (17). கடந்த பிப்.4-ம் தேதி வகுப்பறையில் புத்தக பையை திறந்தபோது உள்ளே இருந்த கட்டுவிரியன் பாம்பு எதிர்ப்பாராத  சிவப்பிரகாசத்தை கடித்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Read Previous

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ உதவும் முன்னோர் வழிபாடு..!!

Read Next

முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular