
தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தொடர்க்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகள் பெல்ட் ஏரியாக்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்கள் 86,000 பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்த பட்டா வழங்குவது பற்றி முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “சென்னை ஷெனாய் நகரில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அமுதா IAS அவர்கள் ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தகவலை தெரிவித்ததாக கூறியுள்ளார்”.