பெண்கள் ஏன் தேங்காய் உடைக்க கூடாது தெரியுமா?.. இதற்குப் பின்னால் இப்படியொரு காரணமா..!!

பெண்கள் ஏன் தேங்காய் உடைக்க கூடாது தெரியுமா? இப்படியொரு காரணமா பொதுவாகவே சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் பழக்கம் இந்து பாரம்பரியம் தமிழர்கள் மத்தியில் இன்றும் நடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு தேங்காய் உடைப்பது சுபகாரியங்களுக்கு மட்டுமல்லாது அசுப காரியங்களுக்கும் உடைப்பார்கள். இவ்வாறு தேங்காய் உடைப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

 

 

தேங்காய் மனித உடலின் பிரதிபலிப்பு என்றும் முன்னோர்கள் சொல்வார். தேங்காயை உடைப்பதால் கர்வம் அழிந்து ஆன்மா சுத்தமாகும் என்றும் சொல்வார்கள். அதாவது சுப நிகழ்வுகளில் தேங்காய் உடைப்பது வரப்போகும் தடைகள் எல்லாம் தகர்ந்து சிதறிப் போக வேண்டும் என்பதற்காகவும் உடைப்பார்கள்.

ஆனால் நீங்களே பார்த்திருப்பீர்கள் சாமி பூஜைகளின் போது பெண்கள் தேங்காய் உடைக்க மாட்டார்கள். இதற்கு ஒரு காரணம் இருக்கிறதாம் அவை என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பெண்கள் ஏன் தேங்காய் உடைக்க கூடாது

 

அதாவது தேங்காய் ஒரு விதை என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அதுபோல பெண் தான் கருவில் சுமக்கும் குழந்தையும் ஆரம்பத்தில் விதை போல இருப்பதால் பெண்கள் தேங்காய் உடைக்கும் போது அது அப்பெண்ணுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதோடு கருப்பையிலும் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்.

மேலும், தேங்காயானது லட்சுமி தேவிக்கு மட்டும் உரித்தானது என்பதால் பெண்கள் தேங்காயை உடைக்க கூடாது என்று சொல்வார்கள்.

தேங்காயின் மேல் மூன்று கண் போல இருப்பது மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, மகேஷ் அவற்றில் வசிப்பதாகவும் அதனால் பெண்கள் தேங்காய் உடைப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

Read Previous

தண்ணீரை கேன்களில் வாங்கி குடிக்கிறீர்களா?.. அப்போ இந்த ஆபத்து நிச்சயம்..!!

Read Next

இட்லி பூ போல மென்மையாக இருக்க வேண்டுமா?.. இனி இப்படி செய்து பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular