பெண்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற அரசு பேருந்து..!! ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட்..!!
கடந்த 13 ஆம் தேதி மாலை திருநெல்வேலியை நோக்கி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் அழகாபுரம் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் கை அசைத்து பேருந்து நிறுத்துமாறு கூறினார்கள். இதை கவனித்த ஓட்டுநர் பெண்கள் கை அசைத்ததை கவனித்தும் நிற்காமல் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்கிருந்த இளைஞர்கள் இதனை பார்த்து பேருந்தை நோக்கி தொடர்ந்து சென்று நிறுத்தி ஓட்டுனரிடம் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்து அதிகாரிகள் அந்த பேருந்து ஓட்டிச் சென்ற ஸ்டீபன் மற்றும் நடத்துனர் மணிகண்டன் ஆகிய இருவரையும் பணியிடம் நீக்கம் செய்துள்ளனர் என்று தெரிய வருகிறது.




