மருத்துவமனையில் குத்தாட்டம் போட்ட செவிலியர்கள்..!! நோயாளிகள் வேதனை..!!
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்ட பிரதான மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் நோயாளிகளை விட்டுவிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு செவிலியர்கள் கோலாட்டத்துடன் நடனமாடியுள்ளனர். நோயாளிகள் அறைக்கு அடுத்த அறையில் இந்த நடனங்கள் நடைபெற்றதால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து, உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கூடுதல் ஆட்சியர் கவுதம் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.