நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே கைத்தறி தொழிலாளர்களுக்கு மானியத்தில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு…
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற கைத்தறி தொழிலாளர்களுக்கு மானியத்தில் வீடு கட்டத் திட்டம் விரைவில் செயல்பட இருப்பதாக இருந்த நிலையில் அதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சா.உமா இன்று செப்டம்பர் 11 நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், மாவட்ட ஆட்சியருடன் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர், மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தை விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளனர், தமிழகத்தில் பல்வேறு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டு வருவதை தொடர்ந்து நகர்ப்புற கைத்தறி தொழிலாளிகளுக்கு மானியத்தில் வீடு கட்டும் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர், பொதுமக்கள் இவற்றைப் பெற்று பயனடையும் விதத்தில் அரசு ஊழியர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்..!!




