
முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிக்கலாமா..?? இல்லை தரிசிக்கக் கூடாதா..?? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிக்க சிலர் தயக்கம் காட்டுவார்கள் கவனித்திருப்போம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முக்கியமான ஒன்று பழனி. பழனியில் உள்ள முருகப்பெருமானின் ஆண்டி கோலமானது அனைத்தையும் துறந்து ஞானத்தை விரும்பக்கூடிய நிலை. முருகர் அலங்காரம் எதுவும் இல்லாமல் ஆண்டி கோலத்தில் இருப்பார் தண்டாயுதபாணி சிலை வெறும் நவபாஷாணத்தால் ஆனது முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் பார்க்கும்பொழுது நமக்குள் ஒரு மெய்ஞானம் உருவாகும் .ஆண்டி அலங்காரத்தில் வெறும் கோவணத்தை சூடி இருப்பார் தண்டாயுதபாணி ஆகையால் ஆண்டி கோலத்தில் இருக்கும் நவபாஷாண முருகரை தரிசிக்க வருபவர்கள் நவபாஷாணத்தின் முழுமையான நேர்மறையான கதிர்வீச்சு கிடைக்கும் என்பதே நம்பிக்கை. திங்கட்கிழமை காலையிலேயே மலையேறி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசிப்பதால் உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி வாழ்க்கையில் ஏற்படும் போட்டி பொறாமை கஷ்டம் தடை போன்றவற்றை நீக்கி ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனி முருகனை தரிசனம் செய்தால் பல நன்மைகள் உண்டாகும். என்று சொல்லப்படுகிறது .மேலும், ஜாதகத்தில் பாதிப்பு தரக்கூடிய நிலையில் எந்த கிரகங்கள் இருந்தாலும் அந்த கிரகத்தால் ஏற்படும் பாதிப்பு தாக்கம் குறைய வேண்டும் என்றால் பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிப்பதே தீர்வாகும். தவறான வழியில் செல்வங்களையும் பொருளையும் தேடக்கூடாது அதுவே சங்கடங்களை அதுவே சங்கடங்களை தரும் எதுவுமே வேண்டாம் என்று விட்டுவிட்டால் உன்னை தேடி அனைத்துமே வரும். என்பதுதான் கண்டுகொண்டு கோவனத்தோடு நிற்க முருகப்பெருமானின் ஆண்டி கோலம் உணர்த்துகிறது. நீ அனைத்தையும் விட்டுவிட்டால் ராஜாவாக இருப்பாய் என்பதை உணர்த்துவதே ராஜா அலங்காரம் இந்த இரண்டு அலங்காரமே சிறப்பு வாய்ந்தது. அதுவே பழனி முருகனை எந்த கோலத்தில் பார்த்தாலும் நமக்கு நற்பலன்களை மட்டுமே தரும் என்பதில் எந்த சந்தேமும் இல்லை.