உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிய சார்ந்த சமத்வாடி கட்சியின் மூத்த தலைவர் விஜய் யாதவ் இவர் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர், இதில் அவரது குடும்பத்தை சார்ந்த ஆறு வயது குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் உள்ள தஷாஷவ்மேத் பகுதியை சார்ந்தவர் விஜய் யாதவ். இவர் சமத்வாடி கட்சியின் மூத்த தலைவராக உள்ளார், இந்நிலையில் இவரது வீட்டில் நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இவரது வீட்டில் உள்ள விஜய் யாதவ் குடும்ப உறுப்பினர்களான ஆறு வயதுடைய நிர்வய் யாதவ், கிரண் யாதவ், உமேஷ் யாதவ், தினேஷ் யாதவ் மற்றும் கோலு என்கின்ற சுபம் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தஷாஷவ்மேத் காவல் நிலையத்தில் விஜய் யாதவ் புகார் அளித்தார். மேலும் இந்த தாக்குதலுக்கு தனது முழு குடும்பத்தையும் கொலை செய்யும் நோக்கில் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் அந்த புகாரியில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அங்கீத் யாதவ். சாஹில் யாதவ், மற்றும் சிலர் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். தஷாஷவ்மேத் போலீசார் இவர்களை குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.தஷாஷவ்மேத் காவல் நிலைய பொறுப்பாளர் ராகேஷ் பாலை சஸ்பண்ட் செய்து வாரணாசி போலீஸ் கமிஷனர் மோகித் அகர்வால் உத்தரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.