Oplus_131072
தேவையான பொருட்கள்:
பாதாம் – 1 கப்
சர்க்கரை – 1 கப் (உங்க இனிப்புக்கு ஏற்ப 3/4 கப்பும் சேர்க்கலாம்)
பால் – 1/2 கப்
நெய் – 1/2 கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை (சிறிது பாலில் ஊறவைத்தது)
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை:
பாதாம் ஊறவைத்தல்: பாதாமை சுடுதண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும். அதன் பிறகு தோலை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு 1/2 கப் பால் ஊற்றி சற்று நைஸாக (அலவா பதத்திற்கு) அரைத்துக் கொள்ளவும்.
கிளறுதல்: ஒரு அடி கனமான பாத்திரத்தில் (அல்லது நான்-ஸ்டிக் பேன்) அரைத்த பாதாம் விழுதை ஊற்றி மிதமான தீயில் கிளறவும். பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.
சர்க்கரை சேர்த்தல்: பாதாம் விழுது சற்று வெந்ததும் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை கரைந்து மாவு மீண்டும் இளகி வரும்.
நெய் சேர்த்தல்: இப்போது பாலில் ஊறவைத்த குங்குமப்பூவைச் சேர்க்கவும் (இது நல்ல நிறம் கொடுக்கும்). பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
பதம்: அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது ஏலக்காய் தூள் தூவி இறக்கவும்.




