தமிழ் மாதத்தில் பல மாதங்கள் விசேஷமான மாதங்களாக உள்ளன. அவற்றுள் ஆடி மாதம் ஆடி வெள்ளி, ஞாயிறு, ஆடி 18, ஆடிப்பூரம், பௌர்ணமி, அமாவாசை, வரலக்ஷ்மி நோன்பு போன்ற பல விஷேச நாட்கள் உண்டு. அந்த வகையில் இந்த மாதம் ஆகஸ்ட் 16ம் தேதி வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி நோன்பு அமைகிறது. அது குறித்து கீழே விரிவாக காணலாம்.
வரலக்ஷ்மி நோன்பு என்பது மஹாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைக்கும் முறை. திருமணமான பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் மாகோலம்மிட்டு மஹாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்க வேண்டும். அந்நாளில் மஹாலட்சுமியை வழிபடுவதால் பல நன்மைகள் குடும்பத்திற்கு கிடைக்கும். திருமணமாகாத பெண்கள் மஹாலட்சுமியை அன்று வழிபட்டு வருவதால் நல்ல கணவர் அமைவார். மேலும் மஹாலட்சுமியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கீழே காண்போம்.
வீட்டில் செல்வம் பெருகும், எல்லாவித அதிர்ஷ்டமும் ஞானமும் கிடைக்கும் , வீட்டில் சுபகாரியங்கள் நாடாகும்,புகழ் மதிப்பு மரியாதை போன்றைவை கிடைக்கும், செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து மோட்சம் கிடைக்கும். இது போல் அனைவர் வாழ்விலும் மஹாலட்சுமியின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.