சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40)–மகேஷ்வரி (39) தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்தனர். குடும்பத் தகராறால் பிரிந்து வாழ்ந்த நிலையில், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியிடம் ஆத்திரமடைந்த பாலமுருகன், நேற்று (டிச.23) மாலை மகேஷ்வரியை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து பாலமுருகன் போலீசில் சரணடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




