Oplus_131072
ஆலிவ் எண்ணெயில் சமைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா…..
சமையலில் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இந்த எண்ணெயில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்று பண்புகள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மூளையை பாதுகாக்கிறது.
இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தை
கட்டுக்குள் வைத்திருக்கும்.
ஆலிவ் எண்ணெயில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இந்த எண்ணெயை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் நாள்பட்ட அலர்ஜி மற்றும் வலியை குறைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், இந்த எண்ணெயில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உங்களை நிறைவாக உணரவைக்கும். பசியின்மை பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் எடை கட்டுப்படும்….



