இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யார்..!! கெவின் பீட்டர்சன் பதில்..!!

இந்திய அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் எப்போதும் குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கும். எப்போது யுவராஜ் சிங் போட்டியை விட்டு நின்றாரோ அப்போதிலிருந்து இந்தியாவிற்கான சரியான நான்காம் இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் கிடைக்கவே கிடையாது. 2019 ஆம் உலகக் கோப்பையில் கூட நாம் தோற்றதற்கு இது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இப்போது டி20 போட்டிகளின் மிடில் ஆர்டர் பேட்ச்மேன் ஆக யாரை களம் இறக்குவது என்று ஒரு கேள்வி இருக்கிறது. கே எல் ராகுல் சூரியகுமார் யாதவ் ரிஷப் பண்ட் ஸ்ரேயஸ் ஐயர் என பலர் இருக்கின்றனர். இவர்கள் நான்கு பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று அனைவருக்கும் குழப்பமாகவே தான் இருக்கிறது. இதில் பண்டைத் தவிர அனைவரும் ஐபிஎல் போட்டியில் சூப்பராக தான் விலை வருகின்றனர்.

இதற்கு பதில் அளித்த டெல்லியின் கோச் கெவின் பீட்டர்சன் ஒரு தீர்வை கொடுத்துள்ளார். சென்ற ஆண்டு விட இந்த ஆண்டு கே எல் ராகுலின் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது என்றும் முன்னேற்றமடைந்து இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்தான் சரியான பொருத்தமாக இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Previous

எங்கு சென்றாலும் இலவச Wifi யை பயன்படுத்துகிறீர்களா..!! திடுக்கிடும் செய்தி உங்களுக்கு..!!

Read Next

ரயிலுக்காக காத்திருந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular