இந்த பழத்தில் பாயசம் செஞ்சி சாப்பிட்டு இருக்கிறீர்களா..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை..!!

நமக்கு இனிப்பு என்றாலே மிகவும் பிடிக்கும். அந்த வகையில் பாயாசம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இன்று நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் சுவையான அன்னாசி பழத்தில் பாயாசம் செய்வது எப்படி என்று காண்போம்.

தேவையான பொருள்கள் :
அன்னாசிப்பழத் துண்டுகள் – 2 கப்
காய்ச்சிய பால் – 1 லிட்டர்
கன்டென்ஸ்டு மில்க் – 2 கப்
ஜவ்வரிசி – 1/2 கப்
பைனாப்பிள் எசன்ஸ் – 2 ஸ்பூன் நெய் நெய், முந்திரி, கிஸ்மிஸ் – தேவையான அளவு

செய்முறை : 

முதலில் ஒரு அன்னாசி பழத்தை தோல் சீவி எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை அலசி ஊற வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து ஒன்றரை கப் நீரூற்றி கொதிக்க ஆரம்பித்ததும் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின் அந்த நீரை வடிகட்டி ஜவ்வரிசியை குளிர்ந்த நீரில் அலசி தனியாக எடுத்துக் கொள்ளவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும் பாதி அளவு அன்னாசிபலத்தை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இதற்கு அடுத்து அலசி எடுத்த ஜவ்வரிசியை மூன்று நிமிடங்கள் வேகவைத்து கண்டன்ஸ்டு மில்க்கை சேர்த்து நன்றாக கலக்கவும். பாயாசம் நன்றாக கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிதளவு பைனாப்பிள் எசன்ஸ் பைனாப்பிள் துண்டுகள் நெய் ஊற்றி முந்திரி திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான அன்னாசிப்பழ பாயாசம் தயார்.

Read Previous

இந்த ஜூஸ குடிச்சா உங்க உடம்புல எந்த பிரச்சனையும் வராது..!! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..!!

Read Next

உங்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டுமா..!! இந்த அடையை சாப்பிட்டால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular