இனிப்பு குழிப்பணியாரம் செய்வது எப்படி……
தேவையான பொருள்கள் –
பச்சரிசி – 100 கிராம்
இட்லி அரிசி – 100 கிராம்
வெள்ளை முழு உளுந்து – 25 கிராம்
தேங்காய் துருவல் – 100 கிராம்
வெல்லம் (துருவியது) – 150 கிராம்
நெய் – 50 கிராம்
எண்ணெய் – 50 கிராம்
உப்பு – 1/2 தேக்கரண்டி
செய்முறை –
பச்சரிசி இட்லி அரிசி, மற்றும் உளுந்து சேர்த்து தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊறிய பின் நன்றாக கழுவி கொஞ்சமாக தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக கிரைண்டரில் அரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.
அடுப்பில் கடாயை வைத்து வெல்லம் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டியில் வடித்துக்கொள்ளவும்..
அரைத்து வைத்திருக்கும் மாவில் வெல்லத்தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
நெய் மற்றும் எண்ணெய் இரண்டையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
அடுப்பில் பணியார கடாயை வைத்து கலந்து வைத்திருக்கும் நெய் மற்றும் எண்ணெயை ஒரு மேஜைக்கரண்டி எடுத்து ஒவ்வொரு குழிக்கும் ஊற்றவும்.
நன்றாக சூடானதும் மாவை எடுத்து அனைத்து குழிகளிலும் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து ஒரு சிறிய கம்பி அல்லது ஸ்பூனால் மாற்றி போடவும்.
இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான இனிப்பு குழி பணியாரம் ரெடி.



