உங்களுக்கு வடை மொறுமொறுவென வேணுமா..!! இப்படி செஞ்சு பாருங்க..!!

பொதுவாகவே நமக்கு தின்பண்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். வேலையில்லாத நாட்களில் வீட்டில் இருக்கும் போது ஏதேனும் தின்பண்டங்களை சாப்பிட வேண்டும் என்று நமக்கு  இருக்கும். அப்படி இன்று அரிசி மாவை வைத்து சுவையான மொறுமொறுவென வடை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 200 கி
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள், உப்பு – சிறிதளவு.

செய்முறை:

முதலில் கருவேப்பிலை கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். அதில் வெட்டிய பச்சை மிளகாய் கருவேப்பிலை பெருங்காயத்தூள் உப்பு சீரகம் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.

பின் அதில் கொத்தமல்லி தழை அரிசி மாவை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறி விடவும். பின் அதை ஆற விட்டு அந்த மாவை வடையாகத் தட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த மாவை அதில் போட்டு வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மொறு மொறுவென அரிசி மாவு வடை தயார்.

Read Previous

பாகற்காய் சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

தங்க நகைகள் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்கள்..!! தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular