ஒருநாள் போட்டியில் உலக சாதனை: 36 ஆண்டு கால சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்கா வீரர்..!!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. லீட்சில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இதற்கிடையே, இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 85 ரன்னும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 58 ரன்னும் குவித்தனர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே உலக சாதனை படைத்துள்ளார்.

இவர் தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் 50 ரன்களுக்கு மேல் (150, 83, 57, 88 மற்றும் 85 ரன்) எடுத்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் 5 ஆட்டங்களில் அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

இதற்கு முன் இந்தியாவின் நவ்ஜோத் சித்து தனது முதல் 4 ஆட்டங்களில் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததே சாதனையாக இருந்தது. அவரது 36 ஆண்டு கால சாதனையை 26 வயதான பிரீட்ஸ்கே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

ஆசிரியர் தின சிறப்பு சிறுகதை..!! கண்டிப்பா அனைவரும் படிங்க..!!

Read Next

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இருந்தால் மறந்தும் கூட இளநீர் குடிக்காதீங்க..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular